பிரபல இந்தியப் பாடகரும் அசாமின் முக்கியக் கலாச்சார நபருமான ஜூபீன் கார்க் சிங்கப்பூரில் உயிரிழந்தார்.
அவர் மயக்க நிலையில் கண்டறியப்பட்ட தீவினை நினைவு கூரும் விதமாக அந்தத் தீவின் பெயரானது கூகுள் மேப் தளத்தில் "ஜுபீன் கார்க் தீவு" என்று மாற்றப் பட்டு உள்ளது.
அசாம் அரசானது, 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது.
விசாரணையில் ஒத்துழைப்பைப் பெறுவதற்காக சிங்கப்பூர் அரசுடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை (MLAT) மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.