உலக மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு நிலை அறிக்கை 2026
June 25 , 2026 7 hrs 0 min 61 0
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது, Blue Transformation: Turning Vision into Impact என்ற கருத்துருவின் கீழ் உலக மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு நிலை (SOFIA) 2026 என்ற அறிக்கையை வெளியிட்டது.
FAO-வின் நீலப் புரட்சி தொலைநோக்குப் பார்வை (2021) என்பது நிலையான நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கம், திறமையான மீன்வள மேலாண்மை மற்றும் உள்ளடக்கிய மதிப்புத் தொடர்கள் மூலம் நீர்வாழ் உணவு அமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளாவிய நீர்வாழ் உற்பத்தி சாதனை அளவாக 235 மில்லியன் டன்களை (2024) எட்டியுள்ளது என்பதோடு இதில் மொத்த நீர்வாழ் விலங்கு உற்பத்தியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு 53% பங்களிக்கிறது.
நிலையான முறையில் நிர்வகிக்கப்படும் மீன் இருப்புகளின் பங்கு 64.5% (2021) -இலிருந்து 62.4% (2023) ஆகக் குறைந்துள்ளது, இது கடல் வளங்கள் மீதான அழுத்தத்தைக் குறிக்கிறது.
உலகளாவிய நீர்வாழ் உற்பத்தியில் (2024) 9% பங்களிப்புடன் சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா உலகளவில் 2-வது இடத்தில் உள்ளது என்பதோடு மேலும், இது உள்நாட்டு மீன்பிடிப்பு உற்பத்தியில் மிகப்பெரிய நாடாகும்.
பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY), மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (FIDF) போன்ற திட்டங்களின் ஆதரவுடன், உலகளாவிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு உற்பத்தியில் சுமார் 12% பங்களிப்பை வழங்கி இந்தியா 2-வது மிகப்பெரிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு நாடாகவும் உள்ளது.