2025 ஆம் ஆண்டிற்கான உலக முதலீட்டு அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு தொடர்பான மாநாட்டு அமைப்பானது (UNCTAD) தற்போது வெளியிட்டுள்ளது.
உலகளாவிய அந்நிய நேரடி முதலீடானது (FDI) 2024 ஆம் நடப்பு ஆண்டில் 11% குறைந்து 1.5 டிரில்லியன் டாலராக இருந்தது.
இது இரட்டை இலக்க வீழ்ச்சி பதிவான இரண்டாவது தொடர்ச்சியானதொரு ஆண்டைக் குறிக்கிறது.
சர்வதேச திட்ட நிதி ஒப்பந்தங்கள் 27% சரிந்தன.
வளர்ந்து வரும் ஆசியாவிற்கான அந்நிய நேரடி முதலீடானது 2024 ஆம் ஆண்டில் 3% சரிந்தது.
முதலீட்டு வரவு 29% சரிந்ததுடன் மிகக் கடுமையான வீழ்ச்சியை சீனா எதிர்கொண்டது என்பதுடன் இந்தியாவின் முதலீட்டு வரவில் 2% சிறு சரிவு எனபது பதிவானது.
ASEAN கூட்டமைப்பு நாடுகள் அந்நிய நேரடி முதலீட்டில் சுமார் 225 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டினை ஈர்த்தது என்பதோடு. இது ஆண்டிற்கு 10% அதிகரித்துள்ளது.
உள்கட்டமைப்பு முதலீடுகள் சுமார் 35% அளவிற்குச்சரிந்தன என்பதோடு, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி 31% சரிந்தது, மற்றும் நீர், துப்புரவு மற்றும் சுகாதாரத்திற்கான செலவு 30% குறைந்தது.
வேளாண் சார் உணவு முதலீடுகள் 19% குறைந்துள்ளன.
சுகாதாரம் மற்றும் கல்வியில் மட்டுமே 25% அதிகரிப்புடன் இந்தப் போக்கிற்கு மாறான முதலீடுகள் பதிவாகியுள்ளன.