TNPSC Thervupettagam

WMO அமைப்பின் ஆசியாவில் பருவநிலை குறித்த தகவல் அறிக்கை 2024

June 27 , 2025 8 days 53 0
  • 2024 ஆம் ஆண்டானது பரவலான, நீடித்த வெப்ப அலைகளுடன் ஆசியாவில் பதிவான வெப்பமான ஆண்டாகும்.
  • 2024 ஆம் ஆண்டில் உலகளாவியச் சராசரி வெப்பநிலை 1850–2024 வரை மிக அதிகமாக இருந்தது.
  • இது 2023 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 1.45°C வெப்பநிலையினைத் தாண்டியது.
  • ஆசியாவில், உலகச் சராசரியை விட சுமார் இரண்டு மடங்கு வேகமாக வெப்பமடைந்த கடல் மேற்பரப்பு வெப்பநிலை இதுவரை இல்லாத அளவிலான உச்சத்தை எட்டியது.
  • ஆசியாவின் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் கடற்கரைகளில் கடல் மட்ட உயர்வு உலகச் சராசரியை விட அதிகமாக இருந்தது.
  • இமயமலை மற்றும் தியான் ஷானில் கண்காணிக்கப்பட்ட 24 பனிப்பாறைகளில் 23 அதன் பனிப் பரவலை இழந்தது என்பதோடு இது பனிப்பாறை ஏரி வெடிப்பினால் ஏற்படும் வெள்ளம் (GLOF) மற்றும் நிலச்சரிவு அபாயங்களை அதிகரித்தது.
  • 2024 ஆம் ஆண்டில், கடல்சார் வெப்ப அலைகள் பெரும்பாலான ஆசியப் பெருங்கடல் பகுதிகளைப் பாதித்தன.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில், 24 மணி நேரத்தில் 259.5 மிமீ மழைப் பொழிவு பதிவானது என்பதோடு இது 1949 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிகவும் கடுமையான சில நிகழ்வுகளில் ஒன்றாகும்.
  • 2024 ஆம் ஆண்டில் இந்திய நாடு முழுவதும் மின்னல் தாக்கியதில் சுமார் 1,300 பேர் கொல்லப் பட்டனர் என்ற நிலையில் ஜூலை 10 ஆம் தேதியன்று 72 பேர் உயிரிழந்தனர்.
  • சீனாவில் ஏற்பட்ட வறட்சி ஆனது சுமார் 4.8 மில்லியன் மக்களைப் பாதித்தது மற்றும் நேரடியாக 2.89 பில்லியன் சீன யுவான் (CNY) மதிப்பிலான இழப்பினை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்