பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் (IEP) ஆனது 2025 ஆம் ஆண்டு உலகளாவிய அமைதிக் குறியீட்டினை (GPI) உருவாக்கியுள்ளது.
உலக மக்கள்தொகையில் 99.7 சதவீதத்தினை உள்ளடக்கிய GPI ஆனது, நம்பகமான ஆதாரங்களில் இருந்து சுமார் 23 தரமான மற்றும் அளவு சார் குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது.
இது சமூகப் பாதுகாப்பு மற்றும் காவல், நடைபெற்று வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல்கள் மற்றும் இராணுவமயமாக்கல் என மூன்று களங்களில் அமைதி நிலையை மதிப்பிடுகிறது.
2025 ஆம் ஆண்டில் உலகளாவிய அமைதியின் சராசரி நிலை 0.36% என்ற அளவிற்கு குறைந்து, தொடர்ந்து ஆறாவது ஆண்டாக மோசமடைவதைக் குறிக்கிறது.
2.229 என்ற GPI மதிப்புடன் 163 நாடுகளில் இந்தியா 115 வது இடத்தில் உள்ளது.
இது 2024 ஆம் ஆண்டில் இருந்ததை விட 0.58% முன்னேற்றத்தைக் காட்டுகிறது (116வது இடம்).
உலகளவில் பாதுகாப்பான நாடான ஐஸ்லாந்து, அனைத்து களங்களிலும் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது.
உலகின் மிகக் குறைந்த அளவு அமைதியான நாடு ரஷ்யா ஆகும்.
இந்தக் குறியீட்டில் வங்க தேசம் 123வது இடத்திலும், பாகிஸ்தான் 144வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 158வது இடத்திலும் உள்ளன.