TNPSC Thervupettagam

உலக முதலீட்டு அறிக்கை 2026

July 14 , 2026 13 days 98 0
  • வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடானது (UNCTAD) உலக முதலீட்டு அறிக்கை 2026-ஐ வெளியிட்டதுடன் இது உலகளாவிய முதலீடு அதிகளவில் குவிந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.
  • உலகளாவிய அந்நிய நேரடி முதலீடு (FDI) 6% அதிகரித்து 2025 ஆம் ஆண்டில் $1.6 டிரில்லியனாக உயர்ந்துள்ளது என்பதோடு இதில் வளரும் நாடுகளை விட வளர்ந்த பொருளாதார நாடுகள் அதிக வளர்ச்சியைப் பெற்றுள்ளன.
  • முதல் 20 நாடுகள் உலகளாவிய FDI வரவுகளில் 80%க்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன என்பதுடன் இது முதலீடு ஒரு சில இடங்களில் குவிவதைக் காட்டுகிறது.
  • செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு, தரவு மையங்கள், குறைக்கடத்திகள் மற்றும் எரிசக்தித் துறைகள் ஆகியவை முக்கியமாக இந்த வளர்ச்சியை உந்தின.
  • 2025 ஆம் ஆண்டில் இந்தியா தனது தரவரிசையை மேம்படுத்தி, உள்வரும் அந்நிய நேரடி முதலீட்டில் (inward FDI) 11-வது இடத்திற்கும், வெளிச்செல்லும் முதலீட்டில் (outward FDI) 18-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்