TNPSC Thervupettagam

உலக வங்கி செயற்கை நுண்ணறிவு அறிக்கை 2026

August 8 , 2026 5 days 71 0
  • வளரும் நாடுகளில் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான செயற்கை நுண்ணறிவின் (AI) திறனை எடுத்துக்காட்டும் "உலக மேம்பாட்டு அறிக்கை 2026: செயற்கை நுண்ணறிவின் வாக்குறுதி" என்ற அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது.
  • உருவாக்கமுறை செயற்கை நுண்ணறிவானது வளரும் பொருளாதாரங்களில் உள்ள தற்போதைய வேலைகளில் 16% க்கும் அதிகமான வேலைகளில் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும் என அந்த அறிக்கை கூறுகிறது.
  • குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளை (4.5%) ஒப்பிடுகையில், அதிக வருமானம் உள்ள நாடுகளில் உள்ள வேலைகள் அதிக தானியங்கு அமைப்பு அபாயங்களை (14.2%) எதிர்கொள்கின்றன என அது குறிப்பிட்டுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவிலிருந்து பயனடைய வளரும் நாடுகளுக்கு நம்பகமான மின்சாரம், இணைய வசதி, தரவு அமைப்புகள், திறன்கள் மற்றும் வலுவான நிறுவனங்கள் போன்ற அடிப்படை வசதிகள் தேவை என அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
  • சரியான கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்புகளால் ஆதரிக்கப்படும் போது, சுகாதாரம், வேளாண்மை, வணிகம் மற்றும் அரசு சேவைகள் போன்ற துறைகளுக்கு செயற்கை நுண்ணறிவு ஆதரவளிக்க முடியும் என அது சுட்டிக்காட்டியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்