TNPSC Thervupettagam

பித்தோரா ஓவியம் - குஜராத்

August 8 , 2026 5 days 88 0
  • இது குஜராத்தின் ரத்வா பழங்குடி சமூகத்தினரின் பல நூற்றாண்டுகள் பழமையான சுவர் ஓவியப் பாரம்பரியமாகும்.
  • இது முக்கியமாக பஞ்சமஹால் மற்றும் சோட்டா உதய்பூரில் காணப்படுகிறது.
  • இது சுமார் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது - ரத்வா, பில் மற்றும் பிலாலா போன்ற பழங்குடியினரால் வரையப்பட்டது.
  • இது வீடுகளின் சுவர்களில் உருவாக்கப்பட்டது.
  • திருமணங்கள், பிறப்புகள் மற்றும் பண்டிகைகள் போன்ற வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளின் போது இந்த ஓவியங்கள் பெரும்பாலும் வரையுமாறு பணிக்கப்பட்டன.
  • பட்வா என்றழைக்கப்படும் ஒரு பூசாரியின் வழிகாட்டுதலின் கீழ், லக்கராக்கள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த சடங்கு ஓவியர்களால் இவை வரையப்பட்டன.
  • பசுவின் சாணம் மற்றும் களிமண் கலவையைப் பூசி சுவர்கள் தயார் செய்யப் படுகின்றன.
  • கலைஞர்கள் தங்கள் ஓவியங்களுக்கான வண்ணங்களை உருவாக்க, கனிமங்கள், தாவரங்கள் மற்றும் பிற கரிமப் பொருட்களிலிருந்து பெறப்பட்ட இயற்கை நிறமிகளைப் பயன்படுத்துகின்றனர்.
  • ஓவியர்கள் மூங்கில் குச்சிகள், பருத்தி மற்றும் மர அச்சுகள் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்துகின்றனர்.
  • இந்த ஓவியங்கள் பழங்குடியினர் மற்றும் இந்து தெய்வங்கள், குதிரைகள், விலங்குகள் மற்றும் விவசாயம், வேட்டையாடுதல், நடனம் போன்ற அன்றாட வாழ்க்கைக் காட்சிகளைச் சித்தரிக்கின்றன.
  • சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் ஆகியவை பொதுவான வண்ணங்களாகும்; இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இயற்கை மூலங்களிலிருந்து பெறப்பட்டவை.
  • இன்றைய பித்தோரா ஓவியர்கள் தாங்கள் வணிகரீதியாக விற்கும் காகிதம் மற்றும் கேன்வாஸை / கித்தானைப் பயன்படுத்துகின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்