TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது 2026

August 8 , 2026 5 days 112 0
  • சென்னையில் நடைபெற்ற விழாவில், பி. பேச்சியம்மாள் மற்றும் கோவிந்தம்மாள் ஆகியோர் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் விருது 2026'-ஐப் பெற்றனர்.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் தன்மை பாதுகாப்பு, கடல்சார் நெகிழிக் கழிவுகளை அகற்றுதல் மற்றும் நிலையான விவசாயம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய அடித்தள நிலையில் செயல்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை இவ்விருது அங்கீகரிக்கிறது.
  • எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF), கேவின்கேர் (CavinKare) பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் ஆகியவற்றுடன் இணைந்து இவ்விருது நிறுவப்பட்டுள்ளது.
  • கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகளைப் பாதுகாக்கும் வகையில், கைவிடப்பட்ட மீன்பிடி வலைகளை அகற்றியதற்காக பி. பேச்சியம்மாள் (ராமநாதபுரம்) கௌரவிக்கப்பட்டார்.
  • இயற்கை விவசாயம் மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் விவசாய முறைகளை ஊக்குவித்தமைக்காகவும், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களை (FPCs) வலுப்படுத்தியதற்காகவும் கோவிந்தம்மாள் (விழுப்புரம்) கௌரவிக்கப்பட்டார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்