TNPSC Thervupettagam

உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த உலகளாவிய அறிக்கை 2026

May 20 , 2026 12 days 81 0
  • உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த உலகளாவிய அறிக்கை (GRID) 2026 இன் படி, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 104 நாடுகளில் 82.2 மில்லியன் மக்கள் உள்நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
  • இந்த அறிக்கை உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தால், நார்வே அகதிகள் சபையுடன் இணைந்து வெளியிடப்பட்டது.
  • உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த நபர்கள் (IDPs) என்பது தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளான ஆனால் தங்கள் சொந்த நாட்டின் எல்லைகளுக்குள்ளேயே தங்கியிருக்கும் மக்கள் ஆவர்.
  • முதன்முறையாக, மோதல்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக 68.6 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்ற நிலையில் இதுவே இடப்பெயர்விற்கான மிகப் பெரிய காரணமாக உருவெடுத்துள்ளது.
  • சூடான் நாடு 9.1 மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களுடன், உலகின் மிகப்பெரிய உள்நாட்டு இடப்பெயர்வு நெருக்கடியைப் பதிவு செய்துள்ளது.
  • மணிப்பூரில் ஏற்பட்ட மேதேயி-குகி வன்முறை காரணமாக 78,000 மக்கள் இன்னும் இடம் பெயர்ந்த நிலையிலேயே உள்ளனர் என்று இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்