TNPSC Thervupettagam

உணவு குறித்த புதிய புவி அரசியல் அறிக்கை

May 20 , 2026 12 days 89 0
  • 'நிலையான உணவு அமைப்புகளுக்கான சர்வதேச நிபுணர்கள் குழு' (IPES-Food) மூலம் “உணவு குறித்த ஒரு புதிய புவி அரசியல்” என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • வர்த்தகப் போர்கள், ராணுவ மோதல்கள் மற்றும் பலவீனமடைந்து வரும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவை உலகளாவிய உணவு அமைப்புகளை மறுவடிவமைப்பு செய்து வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • உலகளவில் பசி மற்றும் பஞ்சம் அதிகம் நிலவும் பகுதிகளில், உணவு என்பது பெருகிய முறையில் போர்க்கருவியாகவும், பொருளாதார ரீதியாக வற்புறுத்தும் ஒரு கருவியாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதை இது சுட்டிக்காட்டியுள்ளது.
  • இந்த அறிக்கை 'பொது உணவு இருப்பு வைத்தல்' (PSH) குறித்து விவாதித்தது, இதன் கீழ் அரசாங்கங்கள் உணவுப் பாதுகாப்பிற்காக உணவு தானியங்களைக் கொள்முதல் செய்து, சேமித்து, விநியோகிக்கின்றன.
  • இந்தியாவின் 'பொது உணவு இருப்பு வைத்தல்' திட்டம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-க்கு ஆதரவளிக்கிறது என்பதோடு மேலும் இது இந்திய உணவுவழங்குக் கழகத்தால் (FCI - Food Corporation of India) நிர்வகிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்