TNPSC Thervupettagam

உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு அடிப்படை மாதிரிகள்

November 22 , 2026 8 days 118 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் உள்ள இந்தியாAI (IndiaAI) திட்டமானது EKA-1, Dhir 2B மற்றும் Dhir 5B ஆகிய மூன்று உள்நாட்டு அடிப்படை மொழி மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • EKA-1, சோகெட் ஏஐ லேப்ஸ் (Soket AI Labs) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது மற்றும் 26.3 பில்லியன் அளவுருக்களைக் (Parameters) கொண்டுள்ளது; இது அனைத்து 22 அட்டவணைப்படுத்தப்பட்ட இந்திய மொழிகளையும் ஆங்கிலத்தையும் ஆதரிக்கிறது.
  • Dhir 2B மற்றும் Dhir 5B ஆகியவை பெங்களூருவைச் சேர்ந்த ஜென்டெய்க் ஏஐடெக் இன்னோவேஷன்ஸ் (ZenteiQ AiTech Innovations) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டன; அவை முறையே 2 பில்லியன் மற்றும் 5 பில்லியன் அளவுருக்களைக் கொண்டுள்ளன.
  • EKA-1 கணிதம், குறியீட்டு முறை, பகுத்தறிவு, வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் இணையப் பாதுகாப்பு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுச் சூழலமைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாAI (IndiaAI) திட்டம் 2024 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
  • பாரத்ஜென் (Param 2 – 17B), சர்வம் AI, ஞானி.AI, க்ருத்ரிம் மற்றும் புராஜெக்ட் இண்டஸ் ஆகியவை பிற இந்திய செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் அல்லது தளங்களாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்