இது ILP (Inner Line Permit) முறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு மாநிலத்தினுள் பயணம் மேற்கொள்ள அல்லது அங்கு தங்குவதற்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்க வேண்டிய ஒரு ஆவணமாகும்.
தற்பொழுது அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் இந்த முறையின் கீழ் உள்ளன.
ILP அந்தந்த மாநில அரசுகளினால் வழங்கப்படுகின்றது.
ILP என்பது வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறைச் சட்டம் - 1873 என்ற ஒரு சட்டத்தின் நீட்டிப்பாகும்.
தற்பொழுது மேகாலயாவானது ILP முறையை நடைமுறைப் படுத்தவும் குடியுரிமை (திருத்தம்) சட்டத்தை நீக்கவும் கோருகின்றது.