TNPSC Thervupettagam

உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம்

June 29 , 2026 15 days 189 0
  • 'உழவர் அலுவலர் தொடர்பு 2.0' திட்டத்தை ரத்து செய்யாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது.
  • பல பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு அரசு அலுவலரே சேவைகளை ஒருங்கிணைக்க இத்திட்டம் அனுமதிக்கிறது என்பதுடன் இதன் மூலம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களை அணுக வேண்டிய தேவையைக் குறைக்கிறது.
  • விவசாயிகளுக்கு விரைவான பயிர் ஆய்வு, தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் சரியான நேரத்தில் மானியத் தொகைகளை வழங்குவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
  • இக்கூட்டமைப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்த விவசாயப் பரப்பளவில் 17,163 வருவாய் கிராமங்களில் 76% நிலம் வேளாண் பயிர்களின் கீழும், 24% நிலம் தோட்டக்கலைப் பயிர்களின் கீழும் உள்ளன.
  • இத்திட்டத்தைத் தொடர்வது மானியங்கள் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்கும் மற்றும் விவசாயிகளுக்கான சேவைகளை மேம்படுத்தும் என இந்தக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்