சமீபத்தில் யூரியா அல்லாத உரங்களுக்கான மானியத்திற்கு ரூபாய் 22,186 கோடியை மானியமாக மத்திய அரசானது ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்தின் கீழ் அம்மோனியம் பாஸ்பேட் எனும் உரத்தையும் சேர்க்க ஒப்புதல் அளித்தது.
ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டமானது, 2010 ஆம் ஆண்டு முதல் வேதியியல் மற்றும் உர அமைச்சகத்தின் உரங்கள் துறையினால் செயல்படுத்தப் பட்டு வருகின்றது.
ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்தின் கீழ், வருடாந்திர அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட அளவு மானியமானது, அதன் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைப் பொறுத்து மானிய விலையில் உள்ள பாஸ்பேடிக் & பொட்டாசிக் உரங்களின் ஒவ்வொரு வகையிலான தரத்திற்கும் வழங்கப்படுகிறது.
யூரியா அல்லாத உரங்களுக்கான மானியத்தைக் கட்டுப்படுத்த ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டமானது முயல்கிறது. மேலும் அது மானியச் சுமையை ஓரளவிற்குக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் யூரியா தவிர மற்ற உரங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.
இந்தத் திட்டமானது இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்களான என், பி, கே மற்றும் எஸ் மீதும் (நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் மற்றும் சல்பர்) மற்றும் மைக்ரோ ஊட்டச் சத்துக்களிலும் கவனம் செலுத்துகிறது.