TNPSC Thervupettagam

ஊட்டச்சத்து திட்டம்

December 11 , 2021 1353 days 658 0
  • கடந்த 3 ஆண்டுகளில் போஷான் அபியான் அல்லது ஊட்டச் சத்து திட்டத்தின் கீழ் வழங்கப் பட்ட மொத்த நிதியில் 56% நிதியினை மட்டுமே மாநில அரசுகளும் ஒன்றியப் பிரதேசங்களும் பயன்படுத்தியுள்ளன என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
  • குறைவான அளவில் நிதியைப் பயன்படுத்திய 5 மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய பிரதேசங்கள்;
    • அருணாச்சலப் பிரதேசம் (25.14%)
    • புதுச்சேரி (28.03%)
    • லடாக் (31.2%)
    • பஞ்சாப் (33.62%) மற்றும்
    • உத்தரப் பிரதேசம் (33.73%)
  • அதிக அளவில் நிதியைப் பயன்படுத்திய 5 மாநில அரசுகள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள்;
    • நாகாலாந்து (98.34%)
    • மேகாலயா (98.14%)
    • மிசோரம் (94.22%)
    • சிக்கிம் (93.13%) மற்றும்
    • தாத்ரா  & நாகர் ஹவேலி (88.2%)
  • போஷான் அபியான் திட்டமானது 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப் பட்டது.
  • வளர்ச்சி குன்றிய நிலை, குறைவான எடையுடன் குழந்தை பிறத்தல், உட்டச்சத்துக் குறைபாடு போன்ற சவால்களை ஆண்டுக்கு 3% வரையில் குறைக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டு வரையில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே நிலவும் இரத்த சோகையை ஆண்டிற்கு 3% ஆக குறைக்கவும் இத்திட்டம் முயற்சி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்