மத்திய உள்துறை அமைச்சகமானது ஊரடங்கு (முடக்கம்) 2..0விற்கான ஒரு திருத்தப் பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்த திறன்மிகு ஊரடங்கின் போது பொதுப் போக்குவரத்துச் சேவைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் மூடியே இருக்கும்.
இறுதிச் சடங்கின் போது 20 நபர்களுக்கு மேல் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த வழிகாட்டுதலானது பணியிடத்தில் முகமூடிகளை அணிவதைக் கட்டாயம் என்று ஆக்கியுள்ளது.
மேலும், எச்சில் துப்பினால் அபராதம் விதித்தல், கை காப்பான் திரவ வசதிகள் மற்றும் உடல் வெப்பநிலை அளவீடு போன்ற சுகாதார நல நடவடிக்கைகள் கட்டாயமாக்கப் பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகமானது தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ் பொது இடங்களில் எச்சில் துப்புவதைக் குற்றமாக்கியுள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் தொழிற்துறைப் பூங்காக்களில் செயல்படும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
நிலக்கரிச் சுரங்கம் மற்றும் எண்ணெய் உற்பத்தி ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.