தேசிய மாணவர் படையானது (NCC - National Cadet Corps) 173 எல்லைப் பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
NCC ஈடுபடுத்தப்படுவதன் மூலம் எல்லைப் பகுதியானது பேரிடர் மேலாண்மைக்காக வேண்டி பயிற்சி பெற்ற மனித சக்தியைப் பெற இருக்கின்றது.
மேலும், அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஆயுதப் படையில் தங்களது வாழ்நாழ் தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக திறன் பயிற்சிகளைப் பெற உள்ளனர்.
மேலும் NCC படையினர் போரிலும் ஈடுபடுவர்.
1971 ஆம் ஆண்டில் வங்கதேச-பாகிஸ்தான் போரின் போதும் 1965 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் போரின் போதும் இவர்கள் அதில் ஈடுபட்டனர்.
74வது சுதந்திர தினக் கொண்டாட்ட உரையின் போது பிரதமர் அவர்கள் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த 1 இலட்சம் NCC வீரர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவர் என்று அறிவித்து இருந்தார்.