TNPSC Thervupettagam

ஆசியான் (ASEAN) நாடுகளில் ஏற்றுமதி வளர்ச்சி

October 22 , 2026 14 hrs 0 min 28 0
  • 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஏற்றுமதியில் வேகமாக வளரும் பிராந்திய இடமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) உருவெடுத்துள்ளது. இதில் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி காரணமாக 56% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
  • ஆசியான் நாடுகளுக்கான இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 2.4 மடங்கு அதிகரித்து 6.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதுடன் இந்த ஏற்றுமதியில் சிங்கப்பூர் மட்டும் நான்கில் மூன்று பங்கைக் கொண்டுள்ளது.
  • ஆசியான் நாடுகளுக்கான கணினி வன்பொருள் ஏற்றுமதி 20 மடங்கு அதிகரித்து 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், மின் இயந்திர ஏற்றுமதி 82% அதிகரித்து 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் உயர்ந்துள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியத்திற்கான (EU) இந்தியாவின் ஏற்றுமதி மிகக் குறைந்த வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 21% சரிந்து 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
  • ஸ்பெயினுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 54% அதிகரித்து 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இத்தாலிக்கான பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 4 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 659 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) 1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று தாய்லாந்தின் பாங்காக்கில் 'பாங்காக் பிரகடனத்தின்' மூலம் நிறுவப்பட்டது.
  • புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, தைமூர்-லெஸ்டே மற்றும் வியட்நாம் ஆகிய 11 உறுப்பு நாடுகளை ஆசியான் கொண்டுள்ளது மற்றும் ஆசியானில் இந்தியா உறுப்பு நாடாக இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்