TNPSC Thervupettagam

உலக சுகாதார அமைப்பின் பெருந்தொற்று நுண்ணறிவு மைய உத்தி

October 20 , 2026 2 days 59 0
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று பெர்லினில் நடைபெற்ற உலக சுகாதார உச்சி மாநாட்டில், உலக சுகாதார அமைப்பானது (WHO) அதன் பெருந்தொற்று மற்றும் கொள்ளைநோய் நுண்ணறிவு மையத்திற்கான ஐந்து ஆண்டு உத்தியை அறிவித்தது.
  • உலகளாவிய நோய்த்தொற்று வெடிப்பைக் கண்டறிதல் மற்றும் பதிலளிப்பதை வலுப்படுத்துவதற்காக கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டில் பெர்லினை தளமாகக் கொண்ட இந்த மையம் நிறுவப்பட்டது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு நாடும் வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல்களை 24 மணி நேரத்திற்குள் கண்டறிந்து புரிந்துகொள்ள உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • திறந்த மூலக் கொள்ளைநோய் நுண்ணறிவு, நோய்க்கிருமி கண்காணிப்பு, தரவு அறிவியல், கூட்டுக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் அமைப்புகள் ஆகியவை இதன் ஐந்து முன்னுரிமைகளில் அடங்கும்.
  • செயற்கை நுண்ணறிவானது (AI) நோய்த்தொற்று வெடிப்பு சமிக்ஞைகளுக்காக பொது ஆதாரங்களை ஸ்கேன்/வருடல் செய்யும், அதே நேரத்தில் 'ஒரே சுகாதாரம்' (One Health) அணுகுமுறையானது மனித, விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை இணைக்கிறது.
  • இந்த மையம் 160 உறுப்பு நாடுகள் மற்றும் 190 கூட்டாளர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்