இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) முதல் முறையாக நைட்ரோசமைன் மாசுகளுக்கான ஏழு குறிப்பு தரநிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தரநிலைகள் ஆய்வகங்கள் மருந்துகளில் உள்ள நைட்ரோசமைன் மாசுகளைத் துல்லியமாகக் கண்டறிந்து அளவிட உதவும்.
நைட்ரோசமைன்கள் என்பவை மருந்துகளின் உற்பத்தி, சேமிப்பு அல்லது பேக்கேஜிங் / பொதியிடல் ஆகியவற்றின் போது உருவாகக்கூடிய தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் ஆகும்.
இந்தத் தரநிலைகள் மருந்துப் பரிசோதனை, தர உத்தரவாதம் மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை மேம்படுத்தும்.
மருந்துத் தரம் மற்றும் மருந்தியல் தரநிலைகள் குறித்து கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்துகள் ஆய்வகத்துடன் (CDL) IPC தனது முதல் ஊடாடும் கூட்டத்தையும் நடத்தியது.