ஐஎன்எஸ் வேலா என்ற போர்க் கப்பலானது இரண்டு வருடத்திற்கும் மேற்பட்ட கடற்வழிச் சோதனைகளை அடுத்து இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப் பட்டது.
இது நாட்டின் நான்காவது ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பலாகும்.
ஐஎன்எஸ் வேலா கப்பல் எதிரிகளை எதிர்த்துப் போரிட ரேடார் கருவிகளில் சிக்காத மேம்பட்ட தொழில்நுட்பம் (stealth) மற்றும் சிறந்த போர் திறன்களைக் கொண்டு இருப்பதாக அறியப்படுகிறது.
டீசல் - மின்னாற்றல் மூலம் இயங்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பலானது மும்பையில் உள்ள மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (Mazagon Dock Ship builders Limited) என்ற நிறுவனத்தின் மூலம் திட்டம் 75 என்பதின் (Project 75) கீழ் கட்டப்பட்டது.
ஐந்தாவதுக் கப்பலான ஐஎன்எஸ் வகிர் ஆனது நவம்பர் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டு துறைமுகச் சோதனைகளை அது தொடங்கியுள்ளது.
இது 2021 ஆம் ஆண்டின் டிசம்பரில் அதன் முதல் மேற்பரப்புக் கண்காணிப்புப் பணியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வாகஷீர் ஆனது தனது தயாரிப்பின் இறுதி நிலையில் உள்ளது.