TNPSC Thervupettagam

ஐ.நா. அமைதிப் படைவீரர்களுக்கான பதக்கம்

June 9 , 2026 5 days 64 0
  • தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகளின் திட்டத்தின் (UNMISS) கீழ் பணியாற்றும் 53 பெண்கள் உட்பட 565 இந்திய அமைதிப் படைவீரர்களுக்கு ஐக்கிய நாடுகளின் பதக்கம் வழங்கப்பட்டது.
  • தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகளின் திட்டம் (UNMISS) என்பது 2011 ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை (UNSC) தீர்மானம் 1996-இன் கீழ் நிறுவப்பட்டது.
  • தெற்கு சூடானின் சுதந்திரத்திற்குப் பிறகு அமைதி, நிலைத்தன்மை மற்றும் நிறுவனங்களை உருவாக்குவதற்கு ஆதரவளிக்க இது உருவாக்கப்பட்டது.
  • UNMISS என்பது உலகின் மிகப்பெரிய ஐக்கிய நாடுகளின் (UN) அமைதிகாக்கும் பணிகளில் ஒன்றாகும்.
  • 4,200-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு, UNMISS-க்கு அதிகப் படைகளை வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்