TNPSC Thervupettagam

ஐ.நா குற்றத் தடுப்பு மாநாடு 2026

October 2 , 2026 5 days 68 0
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதி தொடர்பான 15வது ஐக்கிய நாடுகள் மாநாட்டில் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உரையாற்றினார்.
  • இந்தியாவின் குற்றவியல் நீதி சீர்திருத்தங்கள், டிஜிட்டல் நீதி, இணையவழி குற்றங்கள் மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
  • ஐ.நா குற்ற மாநாடு என்பது குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதி தொடர்பான உலகின் மிகப்பெரிய கூட்டமாகும்.
  • இது ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகத்தால் (UNODC) ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு “Accelerating crime prevention, criminal justice and the rule of law: protecting people and planet and achieving the 2030 Agenda for Sustainable Development in the digital age” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்