TNPSC Thervupettagam

டிஜிட்டல் கால்நடை காப்பீட்டு இணையதளம்

October 2 , 2026 5 days 76 0
  • கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை புது தில்லியில் கால்நடை காப்பீட்டு இணையதளத்தை அறிமுகப்படுத்தியது.
  • இந்த இணையதளம் கால்நடை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாலிசி வழங்குதல், கோரிக்கைகளைச் செயலாக்குதல், கண்காணித்தல் மற்றும் அறிக்கையிடுதல் ஆகியவற்றுக்கு ஒற்றை டிஜிட்டல் தளத்தை வழங்குகிறது.
  • இத்திட்டம் மாடுகள், பன்றிகள் மற்றும் முயல்களுக்கு மானிய விலையிலான காப்பீட்டை வழங்குகிறது; சிறு மற்றும் குறு விவசாயிகள் பிரீமியத்தில் 15% செலுத்துகின்றனர், மீதமுள்ள 85 சதவீதத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன.
  • இந்த முன்னெடுப்பு தேசிய கால்நடை இயக்கத்தின் ஒரு பகுதியாகும்; விலங்குகளை அடையாளம் காணவும் மற்றும் காப்பீட்டு கோரிக்கைகளை சரிபார்க்கவும் ரேடியோ-அதிர்வெண் அடையாளக் (RFID) குறியிடுவதையும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
  • சமீபத்திய ஐந்தாண்டு காலத்தில், 60.8 லட்சம் விலங்குகள் காப்பீடு செய்யப் பட்டு உள்ளன, மேலும் ₹161.07 கோடி மதிப்பிலான காப்பீட்டுத் தொகைகள் விடுவிக்கப் பட்டு உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்