ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதி தொடர்பான 15வது ஐக்கிய நாடுகள் மாநாட்டில் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உரையாற்றினார்.
இந்தியாவின் குற்றவியல் நீதி சீர்திருத்தங்கள், டிஜிட்டல் நீதி, இணையவழி குற்றங்கள் மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
ஐ.நா குற்ற மாநாடு என்பது குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதி தொடர்பான உலகின் மிகப்பெரிய கூட்டமாகும்.
இது ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகத்தால் (UNODC) ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த மாநாட்டின் கருத்துரு “Accelerating crime prevention, criminal justice and the rule of law: protecting people and planet and achieving the 2030 Agenda for Sustainable Development in the digital age” என்பதாகும்.