TNPSC Thervupettagam

ஐ.நா. சுற்றுச்சூழல் சபை 2025

December 11 , 2025 14 days 104 0
  • ஏழாவது ஐ.நா. சுற்றுச்சூழல் சபை (UNEA-7) ஆனது கென்யாவின் நைரோபியில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) கீழ் நடைபெற்றது.
  • UNEA என்பது மிக உயர்ந்த உலகளாவிய சுற்றுச்சூழல்சார் முடிவெடுக்கும் மன்றம் ஆகும் என்பதோடு இது ரியோ+20 மாநாட்டிற்குப் பிறகு 2012 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.
  • UNEA-7 (2025) சபையின் கருத்துரு, "Advancing sustainable solutions for a resilient planet" என்பதாகும்.
  • உலகளாவியச் சுற்றுச்சூழல் கொள்கைகளை சீரமைப்பதற்காக 2026–2030 ஆம் ஆண்டுகளுக்கான UNEP அமைப்பின் நடுத்தரக் கால உத்தியை (MTS) இந்தச் சபை அங்கீகரித்தது.
  • UNEP அமைப்பின் MTS, பருவநிலை நிலைத்தன்மை, பல்லுயிர்ப் பாதுகாப்பு, சுழிய அளவிலான மாசுபாடு, மீள்தன்மை கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புகள், நிலையான வளப் பயன்பாடு மற்றும் வலுவான சுற்றுச்சூழல் நிர்வாகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்