ஏழாவது ஐ.நா. சுற்றுச்சூழல் சபை (UNEA-7) ஆனது கென்யாவின் நைரோபியில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) கீழ் நடைபெற்றது.
UNEA என்பது மிக உயர்ந்த உலகளாவிய சுற்றுச்சூழல்சார் முடிவெடுக்கும் மன்றம் ஆகும் என்பதோடு இது ரியோ+20 மாநாட்டிற்குப் பிறகு 2012 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.
UNEA-7 (2025) சபையின் கருத்துரு, "Advancing sustainable solutions for a resilient planet" என்பதாகும்.
உலகளாவியச் சுற்றுச்சூழல் கொள்கைகளை சீரமைப்பதற்காக 2026–2030 ஆம் ஆண்டுகளுக்கான UNEP அமைப்பின் நடுத்தரக் கால உத்தியை (MTS) இந்தச் சபை அங்கீகரித்தது.
UNEP அமைப்பின் MTS, பருவநிலை நிலைத்தன்மை, பல்லுயிர்ப் பாதுகாப்பு, சுழிய அளவிலான மாசுபாடு, மீள்தன்மை கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புகள், நிலையான வளப் பயன்பாடு மற்றும் வலுவான சுற்றுச்சூழல் நிர்வாகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.