2026 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் (UN) நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) குறியீட்டில், இந்தியா 94-வது இடத்திற்கு (மதிப்பெண் 68.3/100) முன்னேறியுள்ளது; இது இதுவரை இல்லாத மிக உயர்ந்த நிலையாகும்.
2015ம் ஆண்டிலிருந்து இந்தியா 18 இடங்கள் முன்னேறியுள்ளது ஆயினும் தெற்காசியாவில் பூட்டான், மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பின்னாலேயே உள்ளது.
17 நீடித்த வளர்ச்சி இலக்குகளில் 13 இலக்குகளில் இந்தியா சவால்களை எதிர் கொள்வதாகவும், 2030-ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அடைவதற்கான பாதையில் இல்லை எனவும் இவ்வறிக்கை கூறுகிறது.
பசியின்மை (SDG 2), நல்ல ஆரோக்கியம் (SDG 3), பாலின சமத்துவம் (SDG 5), பருவநிலை நடவடிக்கை (SDG 13), மற்றும் அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள் (SDG 16) ஆகியவை முக்கிய கவலைக்குரிய இலக்குகளாகும்.
மின்சார அணுகல் (SDG 7) மற்றும் டிஜிட்டல் இணைப்பு (SDG 9) ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.