ஐ.நா. பெண்கள் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை (UN DESA) ஆகியவை இணைந்து 2026 ஆம் ஆண்டிற்கான பாலினக் கண்ணோட்ட அறிக்கையை (Gender Snapshot 2026) வெளியிட்டன.
பாலினச் சமத்துவத்திற்கான மூன்றில் ஒரு நிறுவன வழிமுறைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவற்றின் நிறுவன அதிகாரத்தைக் குறைத்துள்ளன.
இத்தகைய நிறுவனங்களில் நான்கில் ஒரு பங்கு நிறுவனங்கள் நிதி ஒதுக்கீடு குறைப்பை எதிர்கொண்டன; அதேவேளையில், ஏறக்குறைய பத்தில் ஒரு பங்கு நிறுவனங்கள் தங்கள் நிதி மீதான கட்டுப்பாட்டை இழந்தன.
ஏழு நாடுகளில் ஆறு நாடுகள் ஆண்களால் வழிநடத்தப்படுகின்றன. அதே நேரத்தில் பெண்கள் உலகளவில் 6% தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவிகளை மட்டுமே கொண்டுள்ளனர்.
பத்தில் கிட்டத்தட்ட ஒன்பது பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் பத்தில் எட்டுக்கும் மேற்பட்ட நிதி அமைச்சர்கள் ஆண்கள் ஆவர்.
நிலையான வளர்ச்சி இலக்கு 5 (SDG 5) குறிகாட்டிகள் எதுவும் தற்போது 2030 ஆம் ஆண்டிற்குள் அடைவதற்கான பாதையில் இல்லை என்று அறிக்கை கூறுகிறது.