TNPSC Thervupettagam

WMO நிலத்தடி நீர் அறிக்கை

September 22 , 2026 12 days 128 0
  • உலக வானிலை அமைப்பு (WMO) அதன் உலகளாவிய நீர் வளங்களின் நிலை 2025 அறிக்கையில் இந்தியாவில் தொடர்ச்சியான நிலத்தடி நீர் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
  • 2022-2025 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் தொடர்ச்சியான நிலத்தடி நீர்ப் பற்றாக்குறை காணப்பட்டதுடன் அதிகப்படியான நீர் பிரித்தெடுத்தல் ஒரு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிலத்தடி நீர் மறுநிரப்பப்படுவதை விட அதிகமாக உறிஞ்சப் படுவதையே இந்த வீழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
  • உலகளவில், 34% நிலத்தடி நீர் கண்காணிப்பு நிலையங்கள் 2025 ஆம் ஆண்டில் இயல்பை விடக் குறைவான அளவிலிருந்து மிகக் குறைவான நிலைகளை பதிவு செய்துள்ளன. இது 2024 ஆம் ஆண்டில் 25% ஆக இருந்தது.
  • நிலத்தடி நீர் மட்டங்கள் 2001-2020 ஆம் ஆண்டு குறிப்பு காலத்துடன் ஒப்பிடப்பட்டன.
  • 2025 ஆம் ஆண்டில் வட இந்தியாவும் இயல்பை விடக் குறைவான நிலப்பரப்பு நீர் சேமிப்பைப் பதிவு செய்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்