TNPSC Thervupettagam

ஐ.நா. பாலினச் சமத்துவ அறிக்கை

September 22 , 2026 12 days 132 0
  • ஐ.நா. பெண்கள் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை (UN DESA) ஆகியவை இணைந்து 2026 ஆம் ஆண்டிற்கான பாலினக் கண்ணோட்ட அறிக்கையை (Gender Snapshot 2026) வெளியிட்டன.
  • பாலினச் சமத்துவத்திற்கான மூன்றில் ஒரு நிறுவன வழிமுறைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவற்றின் நிறுவன அதிகாரத்தைக் குறைத்துள்ளன.
  • இத்தகைய நிறுவனங்களில் நான்கில் ஒரு பங்கு நிறுவனங்கள் நிதி ஒதுக்கீடு குறைப்பை எதிர்கொண்டன; அதேவேளையில், ஏறக்குறைய பத்தில் ஒரு பங்கு நிறுவனங்கள் தங்கள் நிதி மீதான கட்டுப்பாட்டை இழந்தன.
  • ஏழு நாடுகளில் ஆறு நாடுகள் ஆண்களால் வழிநடத்தப்படுகின்றன. அதே நேரத்தில் பெண்கள் உலகளவில் 6% தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவிகளை மட்டுமே கொண்டுள்ளனர்.
  • பத்தில் கிட்டத்தட்ட ஒன்பது பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் பத்தில் எட்டுக்கும் மேற்பட்ட நிதி அமைச்சர்கள் ஆண்கள் ஆவர்.
  • நிலையான வளர்ச்சி இலக்கு 5 (SDG 5) குறிகாட்டிகள் எதுவும் தற்போது 2030 ஆம் ஆண்டிற்குள் அடைவதற்கான பாதையில் இல்லை என்று அறிக்கை கூறுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்