TNPSC Thervupettagam

ஐ.நா. விருது 2025 - மேஜர் அபிலாஷா பராக்

May 27 , 2026 3 days 65 0
  • 2025 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டின் சிறந்த இராணுவப் பாலினப் பாதுகாவலர் விருதை மேஜர் அபிலாஷா பராக் பெற்றார்.
  • அவர் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையில் (UNIFIL) பெண்கள் ஈடுபாட்டுக் குழுவின் (FET) தளபதியாக பணியாற்றி வருகிறார்.
  • ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச ஐ.நா. அமைதி காப்பாளர்கள் தினத்தில் அவர் கவுரவிக்கப்படுவார்.
  • பெண்கள் மற்றும் சிறுமிகளுடனான சமூக மேம்பாட்டுப் பணிகள் மற்றும் அமைதி காப்பாளர்களிடையே பாலின உணர்திறன் பயிற்சி அளித்ததற்காக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.
  • மேஜர் அபிலாஷா பராக் இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் ஹெலிகாப்டர் விமானியும் ஆவார்.
  • 2019 ஆம் ஆண்டில் மேஜர் சுமன் கவானி மற்றும் 2023 ஆம் ஆண்டில் மேஜர் ராதிகா சென் ஆகியோருக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் மூன்றாவது இந்தியர் இவர் ஆவார்.
  • இந்த விருதானது 2016 ஆம் ஆண்டில் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான துறையின் கீழ் உள்ள ராணுவ விவகாரங்கள் அலுவலகத்தால் உருவாக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்