குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உபராஷ்டிரபதி பவனில் “The Library Man of India: The Story of P.N. Panicker” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
இந்தப் புத்தகம் பி.என். பணிக்கரின் வாழ்க்கை மற்றும் அவரது பங்களிப்புகளை விவரிக்கிறது.
பி.என். பணிக்கர் கேரளாவின் நூலகம் மற்றும் எழுத்தறிவு இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப் படுகிறார்; மேலும் மாநிலத்தில் வாசிக்கும் பழக்கத்தைப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகித்தார்.
அவர் 1945 ஆம் ஆண்டில் சனாதன தர்ம நூலகத்தை நிறுவினார், பின்னர் கிராமப்புற நூலகங்களை விரிவுபடுத்துவதற்காக கேரள கிரந்தசாலா சங்கத்தை நிறுவ உதவி உள்ளார்.
"வாசித்து வளர்" என்ற அவரது முழக்கம் கேரளா முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் வாசிப்பு மற்றும் கல்வியை ஊக்குவித்தது.
ஜூன் 19 அன்று கொண்டாடப்படும் அவரது பிறந்த நாள் இந்தியாவில் தேசிய வாசிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.