TNPSC Thervupettagam

ஐரோப்பாவின் பருவநிலை குறித்த அறிக்கை 2024

May 2 , 2025 18 days 60 0
  • 2024 ஆம் ஆண்டு முழுவதும், ஐரோப்பியப் பிராந்தியத்திற்கான கடல் மேற்பரப்பு வெப்பநிலை (SST) ஆனது சராசரியை விட 0.7°C அதிகமாகவும், மத்தியத் தரைக் கடல் பிராந்தியத்திற்கான வெப்பநிலையானது சராசரியை விட சுமார் 1.2°C அதிகமாகவும் பதிவாகியுள்ளது.
  • மழைப்பொழிவைப் பொறுத்த வரையில், 1950 ஆம் ஆண்டிலிருந்து அதிக மழைப் பொழிவுப் பதிவான 10 மழைக் காலங்களில் ஒன்று மேற்கு ஐரோப்பாவில் பதிவானது.
  • மிக ஒட்டு மொத்தமாக, நிலப்பரப்பில் சராசரியை விட அதிகமாக சுமார் 34 சதவீதம் வருடாந்திர மழைப் பொழிவு பதிவானதுடன், ஐரோப்பா சராசரியை விட அதிகமான மழைப் பொழிவை எதிர் கொண்டது.
  • 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகவும் பரவலான வெள்ளப்பெருக்கு ஆனது 2024 ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தென்கிழக்கு ஐரோப்பாவில் மிக நீண்ட கால வெப்ப அலைப் பாதிப்பு பதிவானது.
  • கோடை காலத்தில், தென்கிழக்கு ஐரோப்பாவில் 23 வெப்ப மண்டலப் பகுதி காலநிலை கொண்ட இரவுகள் பதிவாகியுள்ளன என்பதோடு இது 2012 ஆம் ஆண்டில் பதிவான 16 இரவுகளை விட மிக அதிகமாகும்.
  • குறைந்த பட்ச தினசரி வெப்பநிலையானது 20°C வெப்பநிலைக்கும் கீழே குறையாத போது வெப்ப மண்டலப்பகுதி காலநிலை கொண்ட இரவுகள் ஏற்படுகின்றன.
  • செப்டம்பர் மாதத்தில், போர்ச்சுகல் நாட்டில் ஒரு வாரத்தில் சுமார் 110,000 ஹெக்டேர் பரப்பளவில் தீ விபத்து ஏற்பட்டு, 42,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்