TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி

May 21 , 2026 12 days 92 0
  • 2025-26 ஆம் நிதியாண்டில் (FY26) அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்தியாவின் மூன்றாவது பெரிய கடல் உணவு ஏற்றுமதி சந்தையாக உருவெடுத்துள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 1.593 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடல் உணவுகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதுடன் இது இந்தியாவின் மொத்த கடல் உணவு ஏற்றுமதி மதிப்பில் 18.94% ஆகும்.
  • FY25 ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கடல் உணவு ஏற்றுமதி மதிப்பில் 41.45% ஆகவும், அளவில் 38.29% ஆகவும் அதிகரித்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மீன்வளர்ப்புப் பொருட்களைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்வதற்கான திருத்தப்பட்ட வரைவுப் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவைச் சேர்த்துள்ளது.
  • உணவுப் பாதுகாப்பு, மீதிக் கண்காணிப்பு மற்றும் பொறுப்பான மீன்வளர்ப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஏற்றுமதி ஆய்வு சபையில் மேற்கொண்ட முயற்சிகளை இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்