31,468.25 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சரண்டா வனத்தை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்குமாறு ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய சால் மரக் காடான சரண்டா வனம் ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் அருகே அமைந்துள்ளது.
"சரண்டா" என்றால் "எழுநூறு மலைகளின் நிலம்" என்று பொருளாகும் மற்றும் இந்தக் காடு சுமார் 900 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.
இதனை "சரண்டா வனவிலங்கு சரணாலயம்" என அறிவித்த முன்னாள் பீகார் அரசின் 1968 ஆம் ஆண்டு அறிவிக்கையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் ஒரு கிலோமீட்டர் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்குள் (ESZ) சுரங்கம் அமைப்பது தடை செய்யப் பட்டுள்ளது என்று நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.