உலகளாவிய வெல்லம் உற்பத்தியில் 70% க்கும் அதிகமான பங்களிப்புடன், உலகின் மிகப்பெரிய வெல்லம் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.
வெல்லம் என்பது கரும்புச் சாற்றை ரசாயன முறையில் சுத்திகரிக்காமல் காய்ச்சுவதன் மூலம் தயாரிக்கப்படும் பாரம்பரியமான, சுத்திகரிக்கப்படாத இயற்கையான இனிப்பாகும்.
இந்தியாவின் கரும்பு உற்பத்தியில் ஏறக்குறைய 20-30% வெல்லம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிற நிலையில் இது சுமார் 2.5 மில்லியன் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது.
இந்தியாவின் கரும்பு உற்பத்தியில் உத்தரப் பிரதேசம் 48.5% பங்களிப்புடன் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (24.1%) மற்றும் கர்நாடகா (10.5%) ஆகிய மாநிலங்களும் உள்ளன.
இந்தியாவின் வெல்லம் ஏற்றுமதி 2015-16 ஆம் ஆண்டில் 197 மில்லியன் டாலரிலிருந்து 2024-25 ஆம் ஆண்டில் 406.8 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளதுடன் இதன் மதிப்பு 106.5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.