புவனேஸ்வரில் அமைக்கப்பட உள்ள இந்தியாவின் முதல் சிலிக்கான் கார்பைடு (SiC) குறைக்கடத்தி ஆலைக்கு ஒடிசா முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
2,067 கோடி ரூபாய் முதலீட்டுடன், இந்தியக் குறைக்கடத்தி திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப் பட்ட இந்த ஆலை 2027-28 ஆம் ஆண்டிற்குள் செயல்பாட்டிற்கு வரும்.
இந்த ஆலை மின்சார வாகனங்கள், இரயில்வே, தரவு மையங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தொழில்துறை வாகன அமைப்புகள் போன்ற முக்கியமான துறைகளுக்கு ஆதரவளிக்கும்.