IDFC First வங்கியானது NPCL அமைப்புடன் இணைந்து சமீபத்தில் FIRSTAP எனப்படும் இந்தியாவின் முதல் ஒட்டி அடிப்படையிலான இந்தியாவின் முதல் பற்று அட்டையினை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது அருகிலுள்ள புலத் தொடர்பு (NFC) செயல்படுத்தப்பட்ட விற்பனை முனையத்தில் இந்த ஒட்டிகளைத் தட்டுவதன் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.
பற்று அட்டைகளை எடுத்துச் செல்லாமல் கடைகள், உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் இந்த ஓட்டிகளைத் தட்டுவதன் மூலம் பணம் செலுத்துவதற்கு இதைப் பயன்படுத்தலாம்.
ரூ.5,000 வரையிலான பணப் பரிவர்த்தனைகளை தனிப்பட்ட அடையாள எண் (PIN) இல்லாமலும், அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்குத் தனிப்பட்ட அடையாள எண் (PIN) உள்ளிடுவதன் மூலமும் இந்தப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும்.