TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த ஜவுளித் திட்டம் – ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2026/27

February 4 , 2026 14 days 70 0
  • ஒருங்கிணைந்த ஜவுளித் திட்டமானது இந்தியாவின் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் ஜவுளி மற்றும் ஆடைத் துறையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஜவுளித் துறைக்கு சுமார் 25% அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • செயற்கை இழைகள், பட்டு, கம்பளி மற்றும் பிற இழைகளை ஊக்குவிப்பதற்காக ஒரு தேசிய இழைத் திட்டம் முன்மொழியப்பட்டது.
  • தொழில்நுட்ப ஜவுளி மற்றும் மதிப்புக் கூட்டலை ஆதரிப்பதற்காக மெகா ஜவுளிப் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
  • ஜவுளி விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டமானது, இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான ஆதரவுடன் பாரம்பரிய மையங்களை நவீன மயமாக்கும்.
  • தேசிய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் திட்டம் நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு இலக்கு சார்ந்த ஆதரவை வழங்கும்.
  • மகாத்மா காந்தி கிராம சுயராஜ்ய முன்முயற்சி காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை வலுப்படுத்தும்.
  • டெக்ஸ்-எகோ (Tex-Eco) முன்முயற்சி நிலையான மற்றும் உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த ஜவுளி மற்றும் ஆடைகளை ஊக்குவிக்கும்.
  • சமர்த் 2.0 திட்டம் நாடு முழுவதும் உள்ள ஜவுளித் திறன் மேம்பாட்டுச் சூழலை மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்