TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு+ அறிக்கை

November 11 , 2022 980 days 532 0
  • மத்தியக் கல்வித் துறை அமைச்சகம் இந்தியாவின் பள்ளிக் கல்வித் துறைக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ் (2021-22) பற்றிய ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது.
  • கல்வித் துறைக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு (UDISE) 2012-13 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • UDISE+ என்பது UDISE திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட வடிவமாகும் என்பதோடு, இதில் பள்ளிகளின் தரவு இணைய வழி மூலமாகவும், நேரடியாகவும் சேகரிக்கப்படுகிறது.
  • UDISE+ என்ற திட்டமானது 2018-19 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் உருவாக்கப்பட்டது.
  • 2021-22 ஆம் ஆண்டில் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையிலான பள்ளிக் கல்வியின் மொத்த மாணவர் சேர்க்கை 25.57 கோடியாகும்.
  • 2020-21 ஆம் ஆண்டு UDISE+ தரவுகளுடன் ஒப்பிடும் போது இது 19.36 லட்சம் அதிகம் ஆகும்.
  • 2020-21 ஆம் ஆண்டில் 4.78 கோடியாக இருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 2021-22 ஆம் ஆண்டில் 4.82 கோடியாக அதிகரித்துள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் 2.49 கோடியாக இருந்த பழங்குடியினரின் சேர்க்கை 2021-22 ஆம் ஆண்டில் 2.51 கோடியாக அதிகரித்துள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் 11.35 கோடியாக இருந்த இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கையானது, 2021-22 ஆம் ஆண்டில் 11.48 கோடியாக அதிகரித்துள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் 53.8% ஆக இருந்த உயர்நிலைக் கல்வியின் மொத்த மாணவர் சேர்க்கையானது, 2021-22 ஆம் ஆண்டில் 57.6% ஆக கணிசமான அளவில் அதிகரித்து உள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் சிறப்புக் கவனம் தேவைப்படுகின்ற குழந்தைகளின் மொத்தச் சேர்க்கையானது, 22.67 லட்சமாகும்.
  • இது 2020-21 ஆம் ஆண்டில் இருந்த 21.91 லட்சத்தில் இருந்து 3.45 சதவீதம் அதிகமாகும்.
  • 2021-22 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்விப் பணியில் 95.07 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ள நிலையில், இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண் ஆசிரியர்கள் ஆவர்.
  • 2020-21 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும் போது, ​​2021-22 ஆம் ஆண்டில் பதிவான மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 1.95 சதவீதம் குறைந்துள்ளது.
  • அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர்கள் நியமனம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் மாணவர் ஆசிரியர் விகிதம் ஆரம்ப நிலைக் கல்விக்கு 26, மேல் நிலைக் கல்விக்கு 19, இரண்டாம் நிலைக் கல்விக்கு 18 மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கு 27 என்ற அளவில் உள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில், ஆரம்ப முதல் உயர்நிலைக் கல்வி நிலை வரை சுமார் 12.29 கோடி பெண்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
  • 2020-21 ஆம் ஆண்டு அறிக்கையுடன் ஒப்பிடும் போது இது 8.19 லட்சம் அதிகமாகும்.
  • அதில் ஓராண்டில் 20,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
  • 27% பள்ளிகளில் மட்டுமே சிறப்புக் கவனம் தேவையுள்ள மாணவர்களுக்கான சிறப்புக் கழிப்பறைகள் உள்ள நிலையில், மேலும் 49%க்கும் அதிகமான பள்ளிகளில் கைப் பிடியுடன் கூடிய சரிவுப் பாதைகள் உள்ளன.
  • 44.85% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதிகள் உள்ள நிலையில் கிட்டத்தட்ட 34% பள்ளிகளில் மட்டுமே இணைய இணைப்பு வசதி உள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் 77% பள்ளிகளில் விளையாட்டு மைதான வசதிகள் உள்ளன.
  • 2021-22 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 27.7% பள்ளிகளில் மழலைப் பள்ளி (காய்கறித் தோட்டம்) இருந்தது.
  • 98 லட்சம் பள்ளிகள் (33%) ஃபிட் இந்தியா பள்ளிகள் திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற்று உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்