'பாரத் இன்னோவேட்ஸ் 2026' திட்டத்தின் கீழ், இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) கள ஆய்வக வசதி இந்திய தொழில் நுட்பக் கழகம் (IIT) மும்பையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த வசதி கார்பன் பிடிப்பு தொழில்நுட்பத்தை, கார்பன் பயன்பாடு மற்றும் நிரந்தரப் புவியியல் கார்பன் டை ஆக்சைடு (CO₂) சேமிப்புடன் ஒருங்கிணைக்கிறது.
இந்தத் திட்டம் இந்தியாவின் 'பஞ்சாமிர்த' பருவநிலை அர்ப்பணிப்புகள் மற்றும் நீண்ட கால நிகர-பூஜ்ய உமிழ்வு இலக்குகளுக்கு ஆதரவளிக்கிறது.
இந்த ஆய்வகம் குடிநீராகப் பயன்படுத்த முடியாத நீரைப் பயன்படுத்தி கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தி, அவற்றைத் தொழில்துறை தர கார்பனேட் மற்றும் பைகார்பனேட் உப்புகளாக மாற்றுகிறது.
தக்காணப் பொறி பசால்ட் பாறை அமைப்புகளில் கார்பன் டை ஆக்சைடு சேமிப்புத் திறனை ஆராய்வதற்கான இந்தியாவின் முதல் சோதனை அளவிலான அறிவியல் பூர்வ துளையிடும் முயற்சியும் இத்திட்டத்தில் அடங்கும்.