மத்திய அமைச்சரவையானது “ஒரு இந்தியா, ஒரு விவசாயச் சந்தை” என்பதின் உருவாக்கத்திற்கு வழிவகை செய்யும் ஓர் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இது வேளாண் உற்பத்திப் பொருளைத் தடையற்ற வகையில் வர்த்தகம் செய்வதை உறுதி செய்வதற்காக “வேளாண் உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல்) அவசரச் சட்டம், 2020” என்று பெயரிடப் பட்டுள்ளது.
இந்த அவசரச் சட்டமானது விவசாய உற்பத்திப் பொருள் சந்தையிடல் குழுவிற்காக இயற்றப் பட்ட மாநிலச் சட்டங்களின் கீழ் அறிவிக்கப் பட்டுள்ள சந்தை வளாகங்களுக்கு வெளியே மாநிலங்களுக்கிடையேயான மற்றும் மாநிலத்திற்குள் நடைபெறும் தடையற்ற வர்த்தகம் வர்த்தகத்தை ஊக்குவிக்க இருக்கின்றது.
இது விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் இருதரப்பினரும் தாங்கள் விரும்பிய வேளாண் உற்பத்திப் பொருளை வாங்குதல் மற்றும் விற்றலுக்கான ஒரு சூழலமைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மின்னணு முறையில் அதிக எண்ணிக்கையிலான அளவில் வர்த்தகம் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக நிதிப் பரிமாற்றத் தளத்தில் ஒரு மின்னணு வர்த்தக முறையைப் பரிந்துரை செய்துள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் விவசாயிகளின் வேளாண் பொருட்கள் மீதான விற்பனைக்கு எந்தவொரு செஸ் (வரி மீதான வரி) அல்லது கட்டணம் எதுவும் விதிக்கப்பட மாட்டாது.
மேலும் மத்திய அமைச்சரவையானது விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் பணிகள் குறித்த ஒப்பந்தம் அவசரச் சட்டம், 2020 என்ற சட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையானது சுரண்டல் குறித்த எந்தவொரு பயமும் இல்லாமல் ஒரு சமமான போட்டி கொண்ட தளத்தில் பொருட்களைச் சேமித்து வைத்திருப்பவர்கள், தயாரிப்பாளர்கள், மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் விவசாயிகள் பங்கு கொள்வதை உறுதி செய்ய இருக்கின்றது.