TNPSC Thervupettagam

ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை

December 14 , 2020 1620 days 573 0
  • இந்தியாவின் 9 மாநிலங்களில் ‘ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை’ கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இந்தக் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்திய 9 மாநிலங்கள் கோவா, ஆந்திரா, ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரப் பிரதேசம், திரிபுரா மற்றும் குஜராத் ஆகியன ஆகும்.
  • இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள எந்தவொரு நியாய விலைக் கடைகளிலிருந்தும் மானிய விலையில் உணவு தானியங்களை வாங்க முடியும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் மிகப்பெரிய பயனாளி மாநிலம் உத்தரப் பிரதேசமாகும்.
  • அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள உணவு மற்றும் பொது விநியோகத் துறை இந்தத் திட்டத்திற்கான முதன்மைத் துறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்