ஆயுதப் படைகளின் ‘ஒரே தரவரிசை ஒரே ஓய்வூதியம்’ என்ற திட்டமானது அதன் 5 ஆண்டு காலப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
தற்பொழுது ஓய்வு பெறும் பாதுகாப்புத் துறைப் பணியாளர்களுக்கு அவர்களின் தரவரிசை மற்றும் பணிக்காலம் ஆகியவற்றைக் கருதாமல் ஒரே அளவில் சீரான ஒரு ஓய்வூதியமானது வழங்கப் பட்டு வருகின்றது.
இது அவர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தின் 50% என்பதாகும்.
2014 ஆம் ஆண்டு ஜுன் 30 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெற்ற ஆயுதப் படைப் பணியாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளடங்குகின்றனர்.