இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் யஷ்வர்தன் K சின்ஹா என்பவரை இந்தியாவின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக (Chief Information Commissioner - CIC) நியமித்துள்ளார்.
இவர் பிரதமர் தலைமையிலான மூன்று உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவினால் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
இந்தக் குழுவில் பிரதமர் மோடியைத் தவிர மக்களவையின் எதிர்க் கட்சித் தலைவரான அதிர் ரஞ்சன் சௌத்ரி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் அன்று தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த பீமல் ஜுல்கா என்பவருக்குப் பிறகு 2 மாதங்களாக இந்தப் பதவி காலியாக இருந்தது.
பின்னர், உதய் மகுர்கர் (பத்திரிக்கையாளர்) ஹீரா லால் சாமாரியா (முன்னாள் தொழிலாளர் நலத் துறை செயலாளர்) மற்றும் சரோஜ் புன்கானி (முன்னாள் துணை சிஏஜி) ஆகியோர் தகவல் ஆணையர்களாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப் பட்டு உள்ளனர்.
CIC ஆணையத்தின் பணிகள் மற்றும் பொறுப்புகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 என்ற சட்டத்தினால் வரையறுக்கப் பட்டுள்ளன.
இவர் தகவல் அறியும் உரிமை (திருத்தம்) சட்டம், 2019 என்ற திருத்தப்பட்ட சட்டத்தின் படி மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார்.
இதற்கு முன்பு அந்த பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருந்தது.
CIC ஆனது 2005 ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் 2005 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.