ஒரே பாலினத்தவரின் திருமணம் தொடர்பான வழக்கிற்கான அரசியலமைப்பு நீதிமன்ற அமர்வு
April 18 , 2023 829 days 294 0
ஒரே பாலினத்தவரின் திருமணங்களுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி தொடரப் பட்ட தொடர் மனுக்களை விசாரிக்க இந்தியத் தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட் அவர்களின் தலைமையிலான புதிய அரசியலமைப்பு அமர்வினை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
இந்த அமர்வில் இடம் பெற்றுள்ள மற்ற நான்கு இணை நீதிபதிகள் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கௌல், S. ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி மற்றும் P.S. நரசிம்மா ஆகியோர் ஆவர்.
விவாதத்திற்குரிய விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட வழக்குகளை குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒரு நீதிமன்ற அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அரசியல் அமைப்பின் 145(3)வது சரத்து குறிப்பிடுகிறது.