ஒளிபரப்புப் பார்வையாளர்கள் ஆராய்ச்சிச் சபை செய்தி ஊடக மதிப்பீடுகள்
January 18 , 2022 1279 days 492 0
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமானது "செய்தி ஊடக மதிப்பீடுகளை" மீண்டும் தொடங்குமாறு ஒளிபரப்புப் பார்வையாளர்கள் ஆராய்ச்சிச் சபையிடம் கூறியுள்ளது.
செய்தி ஊடகங்களினுடைய பார்வையாளர்களின் விவரங்களை வெளியிடுமாறும், அவற்றினுடைய கடந்த மூன்று மாதகாலத் தரவுகளை மாதாந்திர வடிவ ஆவணமாக வெளியிடுமாறும் அமைச்சகம் கூறியுள்ளது.
ஒளிபரப்புப் பார்வையாளர்கள் ஆராய்ச்சிச் சபையானது அதன் செயல்முறைகள், மேற்பார்வை வழிமுறைகள் மற்றும் நெறிமுறைகளைத் திருத்தி அமைத்துள்ளது.
இந்திய ஒளிபரப்புப் பார்வையாளர்கள் ஆராய்ச்சிச் சபை என்பது ஒரு கூட்டுத் தொழில் அமைப்பாகும்.
இது இந்திய ஒளிபரப்பு நிறுவனங்கள், விளம்பரம் மற்றும் ஊடக நிறுவனங்கள் மற்றும் விளம்பரதார நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டு நிறுவப்பட்டது.
இது உலக அளவிலான ஒரு மிகப்பெரிய தொலைக்காட்சி மதிப்பீட்டு அறிவியல் துறை அமைப்பாகும்.