ககோரி இரயில் கொள்ளை நிகழ்வின் 100 ஆம் ஆண்டு நிறைவு
August 15 , 2025
6 days
62
- ககோரி இரயில் கொள்ளை நிகழ்வு ஆனது, 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள ககோரி இரயில் நிலையம் அருகே நடந்தது.
- புரட்சியாளர்கள் சஹாரன்பூர் முதல் லக்னோ வரையிலான பாதையில் பயணித்த 8-டவுன் என்ற இரயிலை நிறுத்தி அரசு கருவூல நிதியைச் சூறையாடினர்.
- சுதந்திரப் போராட்டத்திற்கு நிதியளிப்பதற்காக இந்துஸ்தான் குடியரசுக் கட்சி சங்க உறுப்பினர்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- பிரிட்டிஷ் அரசாங்கமானது, பெருமளவிலான எண்ணிக்கையில் புரட்சியாளர்களைக் கைது செய்து கடுமையான தண்டனைகளை வழங்கியது.
- இராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான், இராஜேந்திர லஹிரி மற்றும் ரோஷன் சிங் ஆகியோர் 1927 ஆம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டனர்.
- அந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் நீண்ட காலச் சிறைத் தண்டனையைப் பெற்றனர்.
- சந்திரசேகர் ஆசாத் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பி, 1931 ஆம் ஆண்டு வரை போராட்டத்தைத் தொடர்ந்தார்.
- 2025 ஆம் ஆண்டில் இந்த சம்பவத்தின் 100 ஆம் ஆண்டு நிறைவு அதிகாரப் பூர்வமாக அனுசரிக்கப் பட்டது.
Post Views:
62